`காதில் கேட்க முடியாத வார்த்தை' - மகன் கண்முன்னே அப்பாவுக்கு நடந்த கோரம்

Update: 2024-11-15 06:58 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அடிமலைபுதூரில் வசிக்கும் சிங்காரவேலு என்பவருக்கு அதே ஊரில் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இவரின் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்திருக்கும் சண்முகம் என்பவருக்கு சிங்காரவேலுவின் பெற்றோர், பொது வழிப்பாதை அளித்திருந்தனர்.

இந்த வழிப்பாதையை பயன்படுத்தி வரும் சண்முகமும் அவருடைய குடும்பத்தினரும் சிங்காரவேலுவின் நிலத்தை வாங்கும் நோக்கில், அவர்களை மிரட்டி வருவதாகவும், அவர்களின் வீட்டுப் பெண்களுக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிங்காரவேலு தனது நிலத்தில் வீடு கட்டும் பணியை செய்து வந்தபோது, சண்முகம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சிங்காரவேலு புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த சண்முகம், சிங்காரவேலுடன் மீண்டும் தகராறு செய்து, அவரை செங்கல்லால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது‌. தகவல் அறிந்து சென்ற பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், மயங்கி கிடந்த சிங்காரவேலுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்