"அரசு டாக்டரான நீங்க எப்படி பிரைவேட்ல வேல பாக்றீங்க" - குத்துப்பட்ட டாக்டர் தலையில் விழுந்த பேரிடி

Update: 2024-11-15 09:36 GMT

சென்னை கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் மீது மெடிக்கல் கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை கிண்டி அரசு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன். இவர் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெல்ஃபேர் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் முகமது கவுஸ், மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். அரசு மருத்துவரான பாலாஜி, தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது எப்படி? - அரசுப் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் ஏதேனும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாரா? - அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள ஏதேனும் பரிந்துரைத்திருக்கிறாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் அதில் எழுப்பப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்