யாருக்குமே தெரியாமல் ஊருக்குள் இருந்த எமன்.. தண்ணி ஊற்றும் போது பெண் மரணம்.. ICU-வில் மற்றொரு பெண்

Update: 2024-11-15 08:56 GMT

சென்னை, மாங்காடு அருகே... மழைநீரை அகற்ற வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரால் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் மின்மோட்டாரை வைத்த நகராட்சி நிர்வாகம்தான் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சென்னை அடுத்த மாங்காடு, மலையம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் தான், இந்த விபரீதச் சம்பவம் 10 நாள்களுக்கு முன் அரங்கேறியது..

மழைக்காலம் என்பதால், நகர் முழுவதும் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற மாங்காடு நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.

மலையம்பாக்கம் ஊராட்சிக்கு தகவல் தெரிவிக்காமலே, மின்மோட்டாரை கேட்பாரற்று நகராட்சி நிர்வாகம் வைத்துச் சென்றதில் இந்த விபரீதம் அரங்கேறியது..

அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண், தேங்கி இருந்த மழைநீருக்கு மத்தியில் இருந்த தொட்டியில் மாட்டிற்கு தண்ணீர் ஊற்ற சென்றிருக்கிறார்..

அப்போது, மின் மோட்டாரில் மின் கசிவு ஏற்படிருந்த சூழலில், இதையறியாமல் சென்ற சாந்தி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

இதில், அவரை காப்பாற்றச் சென்று சசி என்ற பெண்ணும் மின்சாரம் தாக்கியது நிலைமையை மோசமாக்கிய நிலையில், இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்...

நகராட்சி நிர்வாகத்தில் அலட்சியத்தால் இந்த விபரீதம் அரங்கேறியதாக கூறி, அப்பகுதியின் பெண் வார்டு உறுப்பினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது...

இந்நிலையில், சசி என்ற பெண் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மனதை ரணமாக்கி இருக்கும் இந்த சம்பவத்தில், மாங்காடு நகராட்சி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்