இன்னும் அப்டேட் ஆகப்போகும் நம்ம சென்னை சிட்டி - துணை முதல்வர் தீவிர ஆலோசனை | Chennai | Udhayanithi
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை காமராஜர் சாலையில் வாலாஜா சாலையில் இருந்து, கலங்கரை விளக்கம் வரையிலும், புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச். சாலையில் இருந்து பெரியார் சாலை வரையிலும், காந்தி மண்டபம் சாலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலும், இராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரையிலும், கிரீன்வேஸ் சாலையில் ஃபோர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க. பாலம் வரையிலும் உள்ள பேருந்து போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டது.