மாணவர் தற்கொலை - பிராங்க் செய்த மாணவர்கள் சஸ்பெண்ட்

x

கோவை தனியார் கல்லூரியில் மாணவர்கள் மூன்று பேர் பிராங் என்ற பெயரில் கிண்டல் செய்து தாக்கியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த மாணவனை பிராங்க் செய்து தாக்கிய மூன்று மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த நாகராஜ் என்பரது மகனான சத்யநாராயணன் கோவை காளப்பட்டி பகுதியிலுள்ள NGP கலை அறிவியல் கல்லூரியில் b.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கல்லூரியில் அவரது சக வகுப்பு மாணவர்கள் பிராங் என்ற பெயரில் சத்தியநாராயணனை கிண்டல் செய்து அடித்துள்ளனர், மேலும் அந்த மாணவர்கள் சத்தியநாராயணாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது, இதனையடுத்து மனமுடைந்து காணப்பட்ட மாணவன் சத்தியநாராயணா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவன் சத்ய நாராயணா வகுப்பில் மிக சிறந்த மாணவனாகவும் ஒழுக்கமுள்ள மாணவனாகவும் திகழ்ந்ததாகவும் அதே வேளையில் பயந்த சுபாவம் கொண்ட மாணவனாகவும் இருந்த சத்திய நாராயணாவை நேற்று முன்தினம் மூன்று மாணவர்கள் பிராங்க் செய்து தாக்கியது தங்களுக்கு தெரிய வந்த நிலையில் அந்த மூன்று மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இது குறித்த தகவல் அனுப்பியதுடன் அந்த மூன்று மாணவர்களையும் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவன் சத்யநாராயணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சக மாணவர்கள் தாக்கியதால் தான் சத்யநாராயணன் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா...? வேண்டுமென்று கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் தாக்கிய சம்பவத்தில் பிராங்க் என்று கூறி அனுப்புகின்றனரா என்பது அடுத்த கட்ட விசாரணையில் தான் தெரிய வரும்


Next Story

மேலும் செய்திகள்