கூடா நட்பால் வந்த கேடு.. தலைசுற்ற வைத்த கேஸ் - வேலை, வாழ்க்கையை தொலைத்து நிற்கும் போலீஸ்

Update: 2024-11-19 09:00 GMT

போதைப் பொருள் விற்பனை விவகாரத்தில் காவலரே கைது செய்யப்பட்ட சம்பவம் வேலியே பயிரை மேய்ந்த கதையாகியுள்ளது...தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த சென்னையில் சமையல் மாஸ்டராக பணியாற்றும் ரகு என்பவர் 4 கிராம் மெத்தபெட்டமின் போதை பொருளை விற்பனை செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டார். ரகுவிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை ஆரணியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி கண்ணன் என்பவர் சிக்கினார். செல்போன் ஆப்களில் பழக்கமான நபர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கண்ணன் பெங்களூருவில் உள்ள கேமரூனைச் சேர்ந்தவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சென்னையில் விற்றது தெரிய வந்தது. தீரன் அதிகாரம் ஒன்று பாணியில் மாறுவேடத்தில் மறைந்திருந்து

கேமரூன் நாட்டை சேர்ந்த ஜோனதனைப் போலீசார் பிடித்தனர்... அவர் வசித்த அறையின் கழிவறையில் வாசனை திரவிய பொருளில் 50 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் ஆய்வகம் அமைத்து போதைப்பொருள் தயாரித்தது அம்பலம் ஆனது... ஆரணி கண்ணன் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றும் பரணி என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதும், ஜிபே மூலம் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பரணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 மாதங்களுக்கு முன்பு கிரிண்டர் ஆப் மூலம் கேரளாவைச் சேர்ந்த அபிஷேக்குடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. சென்னை ஐயப்பன் தாங்கலில் வசிக்கும் பரணி 2016ல் தான் காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்...

கூடா நட்பால் குறுகிய வழியில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் காவலர் பரணி.

Tags:    

மேலும் செய்திகள்