கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் டூ கோடீஸ்வரி.. 8 ஆண்டு... 6 கோடி வரை..வட்டாட்சியர் அலுவலகத்தை கதற விட்ட பெண்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், அரசு திட்டத்தில் முறைகேடு செய்து 6 கோடி ரூபாய் பணம் சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பார்க்கலாம் விரிவாக...
பத்து வருடங்களுக்கு முன்பு 4 ஆயிரம் ரூபாய் மாத வீட்டு வாடகையை கொடுக்க திணறிய பெண்.. இன்று சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வீடுகட்டி ...பகாசுரீயாக மாறியிருக்கிறார்...T
பதவியோ வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்... ஆனால், செய்கையோ மாவட்ட ஆட்சியரையே ஆட்டிப்படைத்திருக்கிறது...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தவர் அகிலா...
கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்த இவர், அரசு திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும், அதன் மூலம் பயனடையும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்திருக்கிறார்...
சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகையில் ஆரம்பித்து மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் உதவித் தொகை பெற்றுதரும் திட்டத்தை கவனித்து வந்த அகிலாவுக்கு... விண்ணப்பங்களை அப்ரூவல் செய்வதும், பணம் பரிமாற்றத்திற்காக அதிகாரிகளிடம் கையெழுத்து பெருவதுதான் வேலை...
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும், அப்பாவி விதவை பெண்களையும், வயதான விவசாயிகளையும் பார்த்து பார்த்து தேர்வு செய்த அகிலா... அவர்களின், விவரங்களை சேகரித்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பும் போது, படிவத்தின் வங்கி கணக்கில் மட்டும் தன்னுடைய வங்கி கணக்கை பூர்த்தி செய்திருக்கிறார்...
இவ்வாறு தொடர்ந்து தனது கணவர், அம்மா, உறவினர்கள் என அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை தொடர்ந்து பூர்த்தி செய்த அவர், பெரும் மோசடிக்கான வலையை விரித்து வைத்திருக்கிறார்...
இதன்படி, விண்ணப்பங்களை மேல் அதிகாரிகளிடம் கணக்கு காட்டி, அதற்கான உதவித்தொகையை பெற்று, சுமார் 8 ஆண்டுகளாக 6 கோடி வரை பணம் சம்பாரித்தது அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறது...
உதவித்தொகை இன்னும் தங்களுக்கு வரவில்லை என தேடி வரும் பொதுமக்களை ஏதேதோ காரணம் காட்டி இழுத்தடித்து வந்திருக்கிறார்...
மோசடி பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு... லட்சக்கணக்கில் தங்க நகைகள்.... மாதம் ஒருமுறை உயர்தரத்தில் சொகுசு சுற்றுலா என சொர்க்க வாழ்க்கை வந்த அகிலாவை... கணவனை இழந்து வாழ்க்கை சிதைந்து போன பெண் ஒருவரின் குடும்ப வறுமையை பழிதீர்த்திருக்கிறது...
கடலூர் மாவட்டம் பெண்ணடத்தை சேர்ந்த அந்த விதவை பெண், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் பணம் வராததால் சந்தேகமடைந்த நிலையில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் நடப்பதாக கூறி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்திருக்கிறார்...
இது குறித்து, விசாரணை நடத்தை கோட்டாட்சியருக்கு ஆட்சியர் உத்தரவிட்டபோது தான் அனைத்தும் அம்பலமாகியிருக்கிறது...
கம்யூட்ட ஆப்ரேட்டர் அகிலா, அவரின் கணவர் வினோத்குமார், அகிலாவின் தாயார் விஜயா மற்றும் உறவினர்கள் மணிவண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோரை கூண்டோடு தூக்கி கைது செய்தனர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்...
ஐவரிடம் இருந்தும் இரண்டு கார், ஒரு டாடா ஏசி ஐந்தரை சவரன் தங்க நகைகள் மற்றும் பணம், சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து அனைவரையும் சிறையிலடைத்த நிலையில், அகிலா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரை மட்டும் ஜாமினில் விடுதலை செய்திருக்கின்றனர்...
இதற்கிடையே, இந்த மோசடி அரங்கேறியபோது திட்டக்குடி வட்டாட்சியராக இருந்த ரவிச்சந்திரன் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது...