மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சட்ட நகலை எரிக்க முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .