உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

Update: 2025-03-19 02:35 GMT
உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடு பிடி வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உட்கடை கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த மகேஷ்பாண்டி என்பவர் மாடு முட்டியதில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாகவும், உயிரிழந்த மகேஷ்பாண்டி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்