சென்னையில் சினிமா புரொடக்‌ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ரவுடிகள்

Update: 2024-06-22 02:08 GMT

வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகவேந்திரா. சினிமா துறையில் புரொடக்சன் உதவியாளராக பணிபுரிந்து வரும் இவர், அருகில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி சந்தீப்குமார் மற்றும் அவரது கூட்டாளியும் மதுபோதையில் சிகரெட் கேட்டு கடையில் தகராறு செய்திருக்கின்றனர். கடையில் ஆள் இல்லாததால் இருவரையும் சிறிது நேரம் காத்திருக்குமாறு ராகேவேந்திரா சொன்னதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் ராகவேந்திராவை சரமாரியாக தாக்கிய நிலையில், கடையில் இருந்த கொதிக்கும் பாலை அவர் மீது ஊற்றி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் 50 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்த போலீசார், தலைமறைவாக இருந்த ரவுடி சந்தீப்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்