சோழர் காலம் முதல் இருந்த விவகாரம்.. மூத்த வழக்கறிஞரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
சோழர் காலம் முதல் இருந்த விவகாரம்.. மூத்த வழக்கறிஞரை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆக்கிரமிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமெனவும் 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் மழை காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை நியமித்து உத்தரவிட்டனர், வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.