ஆறாத வடுவாய் வடசென்னை சம்பவம் "ஸ்லோ பாய்சன் போல் உடலில் பரவுது...5 மாசமா மீள முடியாமல் தவிக்கிறோம்"

Update: 2024-05-27 09:47 GMT

ஆறாத வடுவாய் வடசென்னை சம்பவம்

"ஸ்லோ பாய்சன் போல் உடலில் பரவுது

5 மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கிறோம்"

அழாத குறையாக புலம்பும் மக்கள்

சென்னை எண்ணூரில், எண்ணெய் கலந்த மழை நீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், 5 மாதங்கள் கடந்தும் இன்றளவும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையில், சென்னை எண்ணூர் பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழைநீரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கழிவுகள் கலந்ததால், பெருந்துயருக்கு ஆளாகினர் எண்ணூர் பகுதி மக்கள்...

எர்ணாவூர், ஆதி திராவிடர் காலனி, பக்கிங்கம் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் எண்ணெய் கலந்த மழை நீர் புகுந்து மக்களை ஸ்தம்பிக்க வைத்தது..

வீடு முழுவதும் எண்ணெய் படிந்து டிவி, பிரிட்ஜ், பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து, மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

எண்ணெய் கசிவால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகினர்... 

Tags:    

மேலும் செய்திகள்