டாஸ்மாக் உட்பட 10 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை- வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..

Update: 2024-04-24 02:10 GMT

அரும்பாக்கம் நூறடி சாலையில் உள்ள, பொம்மை கடை, மளிகை கடை மற்றும் அரசு மதுபான கடை என 10 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பத்தாயிரம் ரூபாய் அளவிலான பணம் மற்றும் செல்போன் உட்பட சில பொருள்கள் இந்த சம்பவத்தில் கொள்ளை அடிக்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில், அரும்பாக்கம் என்.எஸ்.கே நகரில் உள்ள அரசு மதுபான கடையில், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில்... காலியாக இருந்த பல கடைகளின் பூட்டை உடைத்தும், தொழிற்சாலை என நினைத்து சுடுகாட்டின் பூட்டை உடைத்தும் கும்பல் கொள்ளையடிக்க முயன்று ஏமாந்தது தெரியவர, சம்பவம் குறித்தான சிசிடிவி ஆதாரத்துடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்