"இசை தெய்வீகமானது என்ற விழிப்புணர்வு ரத யாத்திரை"

Update: 2024-12-15 17:39 GMT

சங்கீத ஞானமு‘ என்ற அமைப்பு சார்பில் நாயன்மார்கள், ஆண்டாள், கர்நாடக சங்கீத புரவலர்கள் ஆகியோரின் சிலைகளுடன், ‘இசை தெய்வீகமானது‘ என்ற பெயரில் விழிப்புணர்வு யாத்திரை ரதம் வடிவமைக்கப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு மடங்கள், சபாக்களுக்கு செல்வதற்கு திட்டமிட்டு, கடந்த கடந்த 12-ந்தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரை, அன்றைய தினம் மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவில் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து, 14-ஆம் தேதி, கேசவப்பெருமாள் கோவிலில் இருந்து மயிலாப்பூர் பிரம்மா ஞான சபாவுக்கு ரதம் சென்றடைந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமையன்று மயிலாப்பூரில் உள்ள காஞ்சீ மடத்தில் இருந்து ஆர்.கே.மடத்துக்கு ரத யாத்திரை செல்ல திட்டமிட்டு, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். பள்ளியில் ரதம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரத யாத்திரைக்கு போலீசார் திடீரென்று அனுமதி மறுத்து, ரதத்தை சிறைப்பிடித்துள்ளனர்.

இதனால், சங்கீதத்தையும் தெய்வீகத்தையும் இணைக்கும் உணர்வு பூர்வமான இயக்கம் வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட யாத்திரைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக விழாக் குழுவினர் வேதனை அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த ரத யாத்திரையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்றும், சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு வரலாம் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமையன்று மனு அளிக்க இருப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்