சென்னையை பதற வைத்த சம்பவம் - அதிரடி காட்டிய போலீஸ்

Update: 2024-11-19 02:29 GMT

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது இரண்டரை வயது குழந்தை புகழ்வேலனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அசோக் பில்லர் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மாஞ்சா நூல் பறந்து வந்து குழந்தையின் கழுத்தில் சிக்கி உள்ளது. சுதாரித்து கொண்டு வாகனத்தை நிறுத்துவதற்குள் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் வியாசர் பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் குழந்தையை சேர்த்தார். அங்கு கழுத்தில் ஏழு தையல்கள் போடப்பட்ட நிலையில் குழந்தை புகழ்வேலன் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல, ராயபுரம் பகுதியை சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் ஜிலானி பாஷா என்பவர் வியாசர்பாடி ராமலிங்க அடிகளார் கோவில் வழியாக சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் வியாசர்பாடி முழுவதும் அதிரடி சோதனை செய்தனர். அப்பகுதியில் காற்றாடி விட்ட கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரி, குமார், சர்மா நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும்16 வயது சிறுவர்கள் 3 பேர் உட்பட 10 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மாஞ்சா நூல் மற்றும் காத்தாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்