தமிழ்நாட்டில் 20,000 ரவுடிகள்..! RTI-ல் வெளியான பல ஷாக் தகவல் - இதில் ஹைலைட்டே சென்னை லிஸ்ட் தான்

Update: 2024-05-17 05:27 GMT

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நமது மக்கள் சாம்ராஜ்ஜியம் என்ற தன்னார்வல அமைப்பின் தலைவரான சசிகுமார், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமான ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு ரவுடிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரவுடிகள் குறித்து விவரங்களை கேட்டு பெரும் பணியினை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி,சி ஆகிய நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 3 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.

சில மாவட்டங்களில் ரவுடிகள் குறித்த முழு விவரங்கள் இல்லாததும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டும் திருந்தாத ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு புத்தகம் அளவிலான விவரங்களை திரட்டி, அதனை முதலமைச்சர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் சசிகுமார்.

Tags:    

மேலும் செய்திகள்