"நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகினுவானுங்க..ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க...ஆனா படிப்பு மட்டும்தான் உன்கிட்ட இருந்து எடுத்துக்குவே முடியாது" என்ற அசுரன் பட வசனம் போல...
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இளைஞர் Rayan தள்ளுவண்டிக் கடை நடத்திக் கொண்டே கஷ்டப்பட்டு உயிரி தொழில்நுட்பத்தில் தன் Phd படிப்பையும் தொடர்ந்து அசத்தி வருகிறார்...
இவர் Phd மாணவர் என்பது முதலில் பலரும் அறிந்திடாத ஒன்று...
ஆனால் புகழ்பெற்ற அமெரிக்க Vlogger Christopher Lewis... சென்னை வந்திருக்கும் போது Rayan-இன் கடையில் சிக்கன் 65 சாப்பிட்டுள்ளார்... சுவை அசத்தலோ அசத்தல்...அதை விட Christopherஐ அசர வைத்த விஷயம் Rayan ஒரு Phd மாணவர் என்பது தான்...
இதை அவர் தன் சமூக வலைதளத்தில் பகிரவே...நாள்கள் செல்லச் செல்ல Rayan புகழ் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது...
கடினமாக உழைக்கும் மாணவர் Rayanக்கு 100 அமெரிக்க டாலர்கள்...அதாவது கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் பரிசு என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டிருந்தார்...
சிக்கன் 65 கொடுத்த கையோடு...rayan கிறிஸை ஆன்லைனில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்குமாறும் அழைப்பு விடுத்தார்...
படிப்பு ஒரு பக்கம்...வேலை ஒரு பக்கம் என கடினமான இரண்டையும் இலகுவாக கையாண்டு வரும் rayan உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்துள்ளார்...