மகனின் கையை பார்த்ததும் அதிர்ச்சியான தாய்.. ஆசிரியை மீது 3 பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னை புதுப்பேட்டையில் ஒரு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் உணவை திருடி சாப்பிடதாக சக மாணவர் புகார் அளித்ததால், ஆசிரியை அந்த மாணவரை அடித்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் கையில் வீக்கம் இருந்தது கண்டு அவரது தாயார் பள்ளி ஆசிரியையிடம் வாய்த்தகறாறில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.இது தொடர்பாக சிறுவனின் தாயார் கொடுத்த புகார் என் பேரில் சிறார் நீதிச் சட்டம் பிரிவு 77 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆசிரியை மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.