மகனுக்காக பாத்து பாத்து கட்டிய வீடு... உயிர்பலி வாங்கிய கொடூரம் - இதயத்தை அறுக்கும் தாயின் கதறல்...

Update: 2024-11-08 13:27 GMT

புதிதாக கட்டி வந்த வீட்டில், தனது ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்து தாய் கதறிய கதறல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. துயரச் சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம் விரிவாக...

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் அடுத்த ராஜகவுண்டர் பகுதியில்தான்... மனதை ரணமாக்கும் இந்த ஒன்றரை வயது பிஞ்சின் மரணம் அரங்கேறி இருக்கிறது...

மகனின் எதிர்காலத்திற்காக பார்த்து பார்த்து கட்டி வந்த வீட்டில், மகனையே தொலைத்து இந்த தாய் கதறிய கதறல் கதிரிமங்கலத்தையே கலங்கடித்திருக்கிறது...

ஞானசேகர் - அசின் தம்பதியின் ஒன்றரை வயது இளைய மகன்தான் இந்த ரிஷிவந்த்..

தம்பதி இருவரும் தாங்கள் வசித்து வந்த வீட்டின் பக்கத்திலேயே புதிதாக வீடு கட்டி வருக்கின்றனர்..

இந்நிலையில், சம்பவத்தன்று மூத்த மகன் அஸ்வந்த்தை அசின் பள்ளிக்கூடம் அழைத்து சென்றிருந்த நிலையில், இளைய மகன் ரிஸ்வந்துடன் புது வீட்டின் கட்டட பணிகளை கவனித்து வந்திருக்கிறார் ஞானசேகர்...

இதில், எதிர்பாராதவிதமாக தனித்து விடப்பட்ட குழந்தை, விபரீதமறியாமல் விளையாடி கொண்டிருந்த போது.. அங்கு திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறது...

ஒன்றரை வயது பிஞ்சின் மரணம் குறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்