திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் வீட்டில் அதிரடி ரெய்டு - லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

Update: 2024-11-08 13:31 GMT

திண்டிவனம் அடுத்த மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலிசார் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. இதைத் தொடர்ந்து இன்று காலை திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் வெங்கடேஸ்வரியின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் லட்சகணக்கான ரூபாய் ரொக்கம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்