சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், நான்காவது தளத்தில் பால்கனி இடிந்து விழுந்ததில் குலாப் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செயல்திறனற்ற திமுக அரசால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது வேதனை அளிபதாகவும். பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். குடிசை மாற்று வாரிய வீடுகளின் தரம் மற்றும் உறுதியை ஆய்வு செய்து, கட்டிடங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.