கன மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குன்றத்தூர் - ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் உள்ள மேம்பாலத்தின் தரையை உரசியவாறு உபரி நீர் செல்கிறது. மேம்பாலத்தின் இறக்கத்தில் ஏராளமான உபநீர் ஆர்ப்பரித்து வேகமாக செல்வதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.