ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட கடை உரிமையாளர்கள்.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-12-08 02:27 GMT

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவரின் மனைவி இளவரசி,

மெரினா கடற்கரை பகுதியில் நம்ம சென்னை என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரில் பிலால் என்ற பெயரில் எண்ணூரைச் சேர்ந்த முகமது ஷாயின் ஷா மற்றொரு உணவகம் நடத்தி வருகிறார். இளவரசி தனது உணவகத்தில் காம்போ ஆபர் மூலம் உணவு விற்பனை செய்து வந்தார். இதேபோல் முகமது ஷாயின் ஷாவும், காம்போ ஆபர் கொடுத்து விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சாக்ரடீஸ், அந்த உணவகத்திற்கு சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சாக்ரடீஸ், முகமது ஷாயின்ஷா, துர்காதேவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்