விற்ற பிபிஏ ஸ்டூடண்ட்... வாங்கிய எம்பிஏ ஸ்டூடண்ட்- பட்டதாரிகள் பார்த்த அந்த வேலை | Chennai

Update: 2024-11-09 10:36 GMT

சென்னை கோயம்பேட்டில் கஞ்சா விற்ற பிபிஏ பட்டதாரியும், அதை வாங்கிய எம்பிஏ பட்டதாரியும் வசமாக போலீசிடம் பிடிபட்டனர்.

சென்னை கோயம்பேடு ஈ சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 50 கிராம் கஞ்சா சிக்கியது. அந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் சின்மையா நகரைச் சேர்ந்த டான்ஸ்மித் என்பது தெரிய வந்தது... அவர் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கஞ்சா வாங்கியதை ஒப்புக் கொண்டார்... இதையடுத்து போலீசார் சிவக்குமாரின் வீட்டில் சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா பிடிபட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், நடத்திய விசாரணையில் டான்ஸ்மித் எம்பிஏ பட்டதாரி என்பதும் சிவக்குமார் பிபிஏ பட்டதாரி என்பதும் தெரிய வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்