ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தில் விழுந்த நபர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-11-11 02:46 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு, உபரிநீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்ட பாலம் சரியாக கட்டப்படாததால், ராட்சத பள்ளம் ஏற்பட்டு அபாயத்துடன் காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே பள்ளத்தை மூடி மின்விளக்குகளை பொருத்தி நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்