பனிமூட்டம், ஆர்க்கிட் குடில், ஜிப்லைன் பிரமாண்ட கண்ணாடி மாளிகை..சென்னை வாசிகளுக்கு புது சொர்க்கம்

Update: 2024-10-07 10:02 GMT

பனிமூட்டம், ஆர்க்கிட் குடில், ஜிப்லைன்

பிரமாண்ட கண்ணாடி மாளிகை

சென்னை வாசிகளுக்கு உருவானது புது சொர்க்கம்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்..

இயற்கை எழில் மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகமும், 500 மீட்டர் நீள ஜிப்லைனும், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன...

தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீள பனிமூட்டப்பாதை, 2 ஆயிரத்து 600 சதுர அடியில் ஆர்க்கிட் குடில் பிரம்மிப்பூட்டுகின்றன...

மேலும், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் ஆன 16 மீட்டர் உயர 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பினாலான கண்ணாடி மாளிகை ரசிக்க வைக்கிறது...

அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை,

மற்றும் மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் என மனதுக்கு அமைதி தரும் பல்வேறு அம்சங்கள் பூங்காவில் இடம்பெற்றுள்ளன...

பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் என பல்வேறு அமைப்புகளுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது...

இப்பூங்காவைப் பார்வையிட பெரியவர்களுக்கு 100 ரூபாயும், சிறியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு 250 ரூபாயும், சிறியவர்களுக்கு 200 ரூபாயும், குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் பறவையகத்தில் வெளிநாட்டு பறவைகளைப் பார்வையிட்டு உணவளித்து மகிழ பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படும்.

மாலையில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தைக் கண்டு களிக்க பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்படும்.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு 50 ரூபாய் எனவும், புகைப்பட கருவிகளுக்கு 100 ரூபாயும்,

ஒளிப்பதிவு கருவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நுழைவுக் கட்டணங்கள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லும். இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை பெறலாம்.

இப்படி கண்களைக் கவரும் வகையில் கலைநயமாக வடிவமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா தலைநகர் சென்னைக்கு மேலும் அழகூட்டியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்