சென்னை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... ஹாலிடேவ கொண்டாட சரியான நேரம் வந்துடுச்சு
சென்னை, தீவுத்திடலில் 49-வது பொருட்காட்சியை அமைச்சர்கள் ராஜேந்திரன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில், தமிழ்நாடு அரசின் பல்துறை அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கிற்கான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொருட்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொருட்காட்சியில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆனைகுழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு கிடைக்கும் சட்ட உதவிகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் விளக்கங்களை அவர் பார்வையிட்டார்.