கல்லூரி மாணவி வீடியோ காலில் நிர்வாணமாக வந்ததும் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்
மும்பையில் உள்ள கல்லூரியில் முதுநிலை படிப்பைப் படித்து வரும் மாணவி ஒருவர் விடுமுறைக்காகச் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்.அப்போது இன்ஸ்டாகிராம் மூலமாகக் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜீத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியை ஆபாசமாக வீடியோ காலில் வருமாறு பலமுறை வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு மாணவி மறுத்து வந்ததால் சுஜீத் தனது கையை அறுத்து இருக்கிறார். இதனால் இரக்கப்பட்ட மாணவி இரு முறை வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசி இருக்கிறார். இதனை வைத்து சுஜீத் மாணவியை மிரட்டி சுமார் ரூ 5 லட்சம் வரை வாங்கி இருக்கிறார். மேலும் ரூ 50 ஆயிரம் வேண்டும் என்று சுஜீத் மிரட்டி இருக்கிறார். பணத்தைக் கொடுக்காவிட்டால் மாணவியின் ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த மாணவி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக சுஜீத் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்