சென்னை மக்கள் போட்டி போட்டு வாங்கி சுவைத்தது அழுகி கிடக்கும் இதைத்தானா?வயிற்றை குமட்டும் துர்நாற்றம்
சென்னை மக்கள் போட்டி போட்டு வாங்கி சுவைத்தது அழுகி கிடக்கும் இதைத்தானா? அள்ள அள்ள வயிற்றை குமட்டும் துர்நாற்றம்
சென்னை செனாய் நகரில் 800 கிலோ எடையிலான கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
உலகளவில் அதிகம் பேரால் உண்ணப்படும் இறைச்சிகளில் மாட்டிறைச்சிக்குத் தான் 3ம் இடம்...
சுவைக்காகவும்...ஆரோக்கியத்திற்காகவும்... தமிழகத்திலும் மாட்டிறைச்சியை விரும்பி உண்போர் அதிகம்...
அப்படி இருக்க...தலைநகர் சென்னையின் செனாய் நகரில் எவ்வித அனுமதியும் இன்றி மாட்டிறைச்சி விற்பனை செய்த இறைச்சிக் கடையில் ஒரு கிலோ அல்ல...2 கிலோ அல்ல...800 கிலோ எடை அளவிலான அழுகிப்போன மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
தலைநகர் சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள செனாய் நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்...
அதில் சக்திவேல் என்பவர் எவ்வித உரிமமும் இன்றி மாட்டிறைச்சியை விற்று வந்தது தெரிய வந்தது...
பல்லாவரத்தில் இருந்து விதிகளை மீறி வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைக் கொண்டு வந்து பல கடைகளுக்கு விநியோகித்ததும் அம்பலமாகியுள்ளது...அங்கெல்லாம் அதிரடி ரெய்டு தொடரவுள்ளது...
"மாட்டுக்கறிதானா?வேறெதும் கறியா எனவும் ஆய்வு"
உள்ளே நுழையக்கூட முடியாதளவு மாட்டிறைச்சி அழுகிப்போய்...துர்நாற்றம் வீசிய நிலையில், உரிமம் இன்றி விற்கப்பட்ட 800 கிலோ எடையிலான கெட்டுப்போன மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்...
இவை 5 நாள்களுக்கு முன்னதாக வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள்...இந்த இறைச்சி கடைகளுக்கு மட்டுமன்றி...சில்லறை விற்பனையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்...
அதிரடி சோதனையால் அரண்டுபோன கடை உரிமையாளர் சக்திவேல் திடீரென தலைமறைவாகவே...காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்...
கைப்பற்றப்பட்ட 800கிலோ மாட்டிறைச்சியையும் அதிகாரிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிகளை வெட்டவோ...விற்கவோ...பல கட்டுப்பாடுகள் உண்டு...
அதிலும் மாட்டிறைச்சி என்றால் அதற்கென பல வழிமுறைகள் உண்டு...
அப்படி...மாடுகளை வெட்டி இறைச்சிக்காக விற்பனை செய்ய புளியந்தோப்பு, வில்லிவாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் இறைச்சி வெட்டும் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
சதீஷ்குமார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி
"அனுமதிக்கப்பட்ட இறைச்சி வெட்டும் கடைகளில் வாங்கலாம்"
கெட்டுப்போன இறைச்சியை உண்பதால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்பதையறிந்தும் வெறும் பணத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது...