சென்னை மதுரவாயலில் டெலிவிரிபாய் போல் வந்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில், இருந்த 15 சவரன் நகைகள், கொலுசுகள் மற்றும் 6 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உணவு டெலிவரி செய்பவர் போல் வந்த மர்ம நபர், வீட்டின் சுவர் ஏறி குதித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.