துணை நடிகை வீட்டில் திருட்டு.. மகனின் ஜியாமெட்ரிக் பாக்சிலும் கைவரிசை.. குழந்தை பொம்மை டப்பா தான்..
பிறந்த நாளன்று குடும்பத்தோடு வெளியில் சென்ற துணை நடிகையின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தீபா பாஸ்கர் சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டனில் வசித்து வருகிறார். பிறந்த நாளை ஒட்டி குடும்பத்தோடு வெளியில் சென்றிருந்த அவர் இரவு வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தன. இதைக் கண்ட அவர் கதறி அழுத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்... தீபா பாஸ்கர் பணத்தை பீரோவில் வைக்காமல் வேறு இடத்தில் மறைத்து வைத்து இருந்ததால் பணம் தப்பிய நிலையில், பிறந்தநாளை ஒட்டி வெளியே சென்ற போது நகைகளையும் அணிந்து சென்றதால் நல்வாய்ப்பாக நகைகளும் தப்பின. பிற நகைகளை குழந்தையின் பொம்மை டப்பாவில் மாற்றி வைத்திருந்த காரணத்தினால் கொள்ளையர்கள் ஏமாந்துள்ளனர்... வாசனை திரவிய பாட்டில், தீபா பாஸ்கர் மகனின் ஜாமென்ட்ரி பாக்சில் உள்ள 50 ரூபாயைக் கூட விட்டு வைக்காமல் திருடிச் சென்றுள்ளனர்... போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.