இந்தியாவிலேயே முதன்முறையாக... கிடைத்தது தீர்வு... சென்னை போலீஸ் செய்த மாஸ் சம்பவம்...
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தினமும் 8 மணிநேரம் போக்குவரத்து சந்திப்புகளில் பணிபுரிந்து வருவதால் அதிக இரைச்சல் அளவுகளை கொண்ட ஒலி அலைகள் போக்குவரத்து காவலர்களின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, இந்தியாவில் முதல் மாநிலமாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Noise Cancellation Earphone இயந்திரங்களை நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தின் 20 அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. வரும் நாட்களில் அனைத்து போக்குவரத்து காவல் பணியாளர்களுக்கும் இந்த Earphoneகளை வழங்குவதை விரிவுபடுத்துவதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.