"1000 சவரன் நகை.. ஆடி கார்கள்.. Blood Loss.. கணவர் வீடியோ எடுப்பாரு" - வீட்ல அடச்சி வச்சி.. நடந்தது இது தான்..?

Update: 2024-02-21 15:51 GMT

அதிமுக சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஸ்ரீகாந்த் என்பவர் அளித்த புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு கே.பி.கந்தனின் மகனுக்கு, மருத்துவம் படித்த தனது மகளான சுருதி பிரியதர்ஷினியை திருமணம் செய்து வைத்ததாகவும், அப்போது வரதட்சணையாக 600 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி 2 சொகுசு கார்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதுபோதாதென்று, மேலும், 400 சவரன் தங்க நகைகள் கேட்டு, கணவர் சதீஷ்குமார், மாமனார் கே.பி. கந்தன் மற்றும் குடும்பத்தினர் தனது மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது மகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், நகைகள் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததுடன், ஒரு கட்டத்தில் மகளை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் ஸ்ரீகாந்த் தனது புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி. கந்தன், அவரது மகன் சதீஷ்குமார் உட்பட குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததை அடுத்து, அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்