சென்னை அரசு பள்ளியில் நடக்கும் இந்த `பிரச்சனை' - கொதித்து போன ஆசிரியர்கள் எடுத்த முடிவு
சென்னையில் உள்ள அரசுப்பள்ளியில் சாதிய பிரச்சனையால் ஆசிரியர்கள் கொதிப்படைந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவனை சாதிப் பெயரைச் சொல்லி 2 ஆசிரியர்கள் அழைத்ததாக கூறி, ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதோடு, சமுதாய தலைவர்களை தங்களுக்கு ஆதரவாக பரிந்துரை செய்ய கோரியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமை ஆசிரியைக்கு எதிராக மொத்தமுள்ள 60 ஆசிரியர்களில், 45 ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் ஞானகவுரி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி விசாரணை நடத்தினர். இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காமல் அமைதி காத்து வருவதாகக்கூறி, வரும் 2-ம் தேதி பள்ளி திறந்ததும் போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.