சமத்துவ பொங்கல் விழா - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

Update: 2025-01-12 13:19 GMT

வாக்கிங் செல்வதற்குத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்கு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாட்டில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, திமுக நிர்வாகிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார். திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கியதுடன், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளுநருக்கு அதிமுக ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்