"விடக்கூடாத இடத்தில் தலைய விட்டுட்டியே" - இருண்டு போன பூனையின் உலகம்

Update: 2024-12-05 04:54 GMT

"விடக்கூடாத இடத்தில் தலைய விட்டுட்டியே" - இருண்டு போன பூனையின் உலகம்


பூனையின் தலையில் சிக்கிய பால் சொம்பை விலங்கு நல ஆர்வலர் போராடி அகற்றிய சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடிக்க முயன்ற பூனையின் தலையில் பால் சொம்பு சிக்கிக்கொண்டது. பூனையையின் பரிதாப நிலையை பார்த்த வீட்டின் உரிமையாளர் விலங்கு நல ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற செல்லா, பூனையின் தலையில் சிக்கிய சொம்பை 2 மணி நேரம் போராடி அகற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்