கணப்பொழுதில் ஏறி இறங்கிய பின் சக்கரம்..சிதைந்த தலை.. தங்கை வேதனை பேட்டி..

Update: 2024-12-17 14:46 GMT

 வேதாரணியம் தாலுக்கா செம்போடை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கௌரி என்பவர், தனது சகோதரியுடன் ஆயக்காரன்புலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும், திருத்துறைப்பூண்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். மேலமருதூர் செங்காதலை பாலம் அருகே அவர்கள் இறங்கும்போது, கௌரி தவறி கீழே விழுந்துள்ளார். இதை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், பேருந்தின் பின்சக்கரம் ஏறி கெளரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்