#BREAKING || தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்.. அரசிதழில் வெளியீடு

Update: 2023-08-25 08:41 GMT

நில ஒருங்கிணைப்பு சட்டம் - அரசிதழில் வெளியீடு

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 -

ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த, நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு வழிவகை செய்யும் சட்டம்

அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று கருதினால், ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்ள அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம்

250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்

அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளன.

இந்த சட்டம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம்-2023 என்று அழைக்கப்படும்.

மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது.

அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளன.

பொதுவாக, அரசு நிலம் என்று சொன்னாலும் அது பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை - தேவை என்று அரசு கருதினால் - ஒருங்கிணைத்து கையகப்படுத்திக் கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

Tags:    

மேலும் செய்திகள்