மோசம் போன `பிக்பாஸ்' சவுந்தர்யா - பொதுவெளி வந்த ரகசிய ரிப்போர்ட்.. மொத்த ஆதாரமும் அம்பலம்

Update: 2024-11-09 06:39 GMT

சைபர் கிரைம் மோசடியால் 17 லட்சம் ரூபாய் இழந்துவிட்டதாக நடிகை சவுந்தர்யா அண்மையில் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய போது, ஒரு போன் காலில் 17 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக சவுந்தர்யா கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை சணம் செட்டி சந்தேகம் எழுப்பிய நிலையில், மோசடி குறித்து பதிவான முதல் தகவல் அறிக்கையை சவுந்தர்யா குடும்பத்தார் பகிர்ந்தனர். கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி சவுந்தர்யாவை செல்போனில் அழைத்த கும்பல், பெடெக்ஸ் கொரியர் மூலம் போதைப்பொருட்களை அனுப்பியதாக கூறியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிபிஐ அதிகாரி போன்று பேசிய ஒருவர், சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் மிரட்டியுள்ளார். சட்டவிரோத பணம் இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவோம் எனக்கூறியதை கேட்டு சவுந்தர்யா 17 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்துபோனதாக கூறியுள்ளார். ஏற்கனவே அவரது செல்போன் டெல்லியில் காணாமல் போன நிலையில், அதன்மூலம் மோசடி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்