ஒரே வாரத்தில் வெளுத்துப்போன சாயம்...கையும் களவுமாக சிக்கிய அதிகாரி ..கலெக்டருக்கே பேரதிர்ச்சி

Update: 2024-08-22 08:52 GMT

சிறந்த அதிகாரி என கலெக்டரின் கையால் விருது வாங்கிய பெண் அதிகாரி ஒருவர் இப்போது லஞ்ச வழக்கில் சிக்கியிருக்கிறார்.. என்ன நடந்தது? எங்கே நடந்த சம்பவம் இது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தன் பணியில் சிறந்து விளங்கியதற்கான நற்சான்றிதழை அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றவர்தான் இந்த எழில்ராணி...

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் உதவி இயக்குநராக பணியாற்றி வருவபர் தான் இவர்....

கடந்த ஒரு வருடமாக வேளாண் உதவி இயக்குநராக எழில்ராணி பணியாற்றி வரும் நிலையில், கீழப்பழுவூரில் அமைந்திருக்கும் இந்த வேளாண் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனைதான் தற்போது மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது...

சோதனையில், கணக்கில் வராத பணம் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்...

விசாரணையில், மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மக்காச்சோளத்துக்கும், நானே யூரியா மற்றும் இயற்கை உரங்கள் போன்றவைகளுக்கும் 540 ரூபாய் கூடுதலாக விதித்து பணம் வசூல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது...

பணம் அனைத்தும், மானியத்துடன் கூடிய சிறப்பு தொகுப்பு விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்து முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது..

அதோடு இல்லாமல், விவசாயிகளுக்கான பல்வேறு இடுபொருட்கள், வழங்கல் விதைகள் உள்ளிட்டவை வழங்க விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது...

இந்நிலையில், வேளாண் உதவி இயக்குநர் எழில்ராணியை பிடித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஒரு வாரத்திற்கு முன்... சிறந்த முறையில் பணியாற்றியதற்கான நற்சான்றிதழை சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரின் கையில் இருந்து பெற்ற அதிகாரி ஒருவர், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் பிடியில் சிக்கி விசாரிக்கப்பட்டு வருவது பெரும் பேசுபொருளாகி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்