கழுத்தில் கொத்திய பாம்பு.. செவிலியர்கள் அளித்த சிகிக்சை.. அடுத்த நொடியே இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Update: 2024-09-13 15:28 GMT

பாம்பு கடிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிக்குடியை சேர்ந்த அஜித்குமார் என்ற பட்டதாரி இளைஞர், தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலையில் அவரின் கழுத்து பகுதியில் பாம்பு ஒன்று கடித்தது. உடனடியாக அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அதிகாலை நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. காலை நேரத்தில் தாமததாக பணிக்கு வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தத நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அஜித்குமார் உயிரிழந்தார். பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அஜித் குமாரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் அவரின் உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.   

Tags:    

மேலும் செய்திகள்