அரபிக் கடலுக்குள் மாறிய சூழல்.. - இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்

Update: 2024-10-14 02:51 GMT
  • அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, ஓமன் நாட்டின் மசிராவிற்கு தென்கிழக்கே சுமார் 860 கிலோ மீட்டர் தொலைவிலும், ஓமன் நாட்டின் சலாலாவிலிருந்து கிழக்கே ஆயிரத்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும், யேமன் நாட்டின் அல்கைதாக்கு கிழக்கே ஆயிரத்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்