அண்ணா யுனிவர்சிட்டி... மாணவி விவகாரம்... உள்ளே வந்த Ex DGP... களமிறங்கும் டெல்லி டீம்...

Update: 2024-12-28 13:20 GMT

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் டிஜிபிமான பிரவீன் தீக்ஷித் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கார் அமைத்துள்ளார். இந்தக் குழு பாதிக்கப்பட்ட பெண் அவர்களின் பெற்றோர், அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் கலந்துரையாடி உண்மைகளை பெறுவதோடு, இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 30ஆம் தேதி இந்த குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்