கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலம், குளிப்பவரின் மூக்கு துவாரம் மற்றும் காதுமடல் வழியாக அமீபாக்கள் மூளைக்கு சென்று தாக்குவதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது. கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு, கடந்த 2 மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுவ னுக்கு, அமீபிக் மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.