"கடவுளே அஜித்தே" - வாண்டுகளின் அட்டூழியம்... சைலண்ட்டான டிடிவி தினகரன் | TTV Dhinakaran | Ajith
திருப்பூரில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில், கடவுளே அஜித்தே என சில மாணவர்கள் கோஷமிட்டனர்.பெண்ணியத்திற்காக ஓடு என்ற தலைப்பில் திருப்பூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க வந்த டிடிவி தினகரன், மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பரிசு வாங்க காத்திருந்த மாணவர்களில் ஒரு தரப்பினர் கடவுளே அஜித்தே என கோஷம் எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்து தனது பேச்சை நிறுத்திய டிடிவி தினகரன், நிர்வாகிகள் மூலம் என்ன சொல்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொண்டார். மாணவர்கள் அமைதி அடைந்த பின்னர் தனது பேச்சை தொடர்ந்தார்.