திடீர் திருமணத்தால் தமிழகத்தில் பூகம்பம்.. கடைசியில் ஆதினத்திற்கு நேர்ந்த கதி

Update: 2024-11-13 06:18 GMT

சூரியனார் கோயில் ஆதினத்தின் திடீர் திருமண சர்ச்சையில், ஆதின மடாதிபதியை ஆதினத்தை விட்டு வெளியேற்றி மடத்தை மக்கள் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணி களேபரத்தை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகளின் திடீர் திருமணத்தால் சர்ச்சையில் சிக்கி பரபரப்பில் இருந்த திருவிடைமருதூர் சூரியனார் கோவில் ஆதினம்.... அப்பகுதி வாசிகளின் திடீர் முற்றுகையால் ஸ்தம்பித்து போயிருக்கிறது..

திருமண பந்தத்தில் ஈடுபட்ட மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகளால் மடத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்து பகுதி முழுவதும் போஸ்டர் அடித்த மக்கள், மகாலிங்க சுவாமிகள் ஆதின மடத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்..

இதனிடையே, மற்றொரு தரப்பினர் மடத்தை விட்டு ஆதீனம் வெளியேறக் கூடாது எனக் கூறவே, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது நிலைமையை மேலும் மோசமாக்கியது..

இந்த சூழலில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், வெளியில் நடந்து கொண்டிருந்த களேபரத்தை அறிந்த மகாலிங்க சுவாமிகள், மடத்தின் சொத்துகளுக்கு எந்தவிதமான அசாம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாதெனக் கூறி வெளியேறி வந்து வேறொரு பகுதியில் அமர்ந்து கொண்டது பரபரப்பை மேலும் கூட்டியது ..

உடனே மகாலிங்க சுவாமிகளின் எதிர்ப்பாளர்கள் மடத்தின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்..

இறுதியில், இந்து சமய அறநிலையத் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதற்கு நான் கட்டுப்படுவேன் என மகாலிங்க சுவாமிகள் தெரிவித்த நிலையில், ஒரு தரப்பு நீங்கள் உள்ளே செல்லுங்கள் எனவும், மறுதரப்பு உள்ளே அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறி மல்லுக்கட்ட, இரு தரப்பையும் போலீசார் அப்புறப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது...

Tags:    

மேலும் செய்திகள்