ரூ.30,000 லஞ்சம் வாங்கிய SI-யை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை | Tenkasi
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் வழக்கு முடிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணகுடி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது பதிவு செய்யப்பட்ட ஆள் கடத்தல் வழக்கை முடித்து வைக்க மேரி ஜெமிதா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த நிலையில், கடையம் காவல் நிலையத்தில் லஞ்ச பணத்தை பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
https://youtu.be/YppCl24pegM