வகுப்புக்குள் அத்தனை பேர் இருந்தும் மாணவன் இறந்தது யாருக்கும் தெரியல.. என்ன நடந்தது?

Update: 2024-08-09 05:33 GMT

திருச்சியில் பள்ளி வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டு இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், உணவு இடைவேளை முடிந்து வகுப்பு தொடங்கிய போது, 2ம் வகுப்பு மாணவர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனை அழைத்துச் சென்ற போது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த வகுப்பறைக்குள் இருந்த சி.சி.டி.வி. பதிவை ஆய்வு செய்த போது, உணவு இடைவேளையில் வெளியே விளையாடி விட்டு சோர்வுடன் வந்த அந்த சிறுவன், வலிப்பு ஏற்பட்டு மயங்கியது தெரிய வந்தது. மேலும், இதனை சக மாணவர்கள் கவனிக்காததால், உடனடியாக முதலுதவி கொடுக்க முடியாமல் சிறுவன் பரிதாபமாக இறந்ததும் உறுதியானது. உயிரிழந்த சிறுவனுக்கு இதய பிரச்சினை காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்