இந்தியா- பாக்.போட்டியின் கடைசி 2 பந்தும்..இரவு 12 மணியும்- நாடையே பற்றி எரியவைத்த பாக் வீரர் பேச்சு

Update: 2024-06-11 16:46 GMT

இந்தியா- பாக்.போட்டியின் பரபரப்பான

கடைசி 2 பந்தும்..இரவு 12 மணியும்

நாடையே பற்றி எரியவைத்த பாக் வீரர் பேச்சு

அதே 12 மணிக்கு மண்ணை கவ்விய அக்மல்

சீக்கியர்கள் குறித்து இழிவாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். என்ன நடந்தது?... விரிவாகப் பார்க்கலாம்...

டி20 உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இத்தகைய சூழலில் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்த இழிவான கருத்து தற்போது பூதாகரமாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நேரலையில் போட்டி தொடர்பான கலந்துரையாடலில் கம்ரான் அக்மல் கலந்துகொண்டார். நள்ளிரவு 12 மணியைக் கடந்து போட்டி நடைபெற்ற சூழலில், இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது,,,, ஏற்கனவே 12 மணியாகிவிட்டது..... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..... ஏனெனில் சீக்கியர்களிடம் இரவு 12 மணிக்குப் பிறகு பவுலிங் தரக் கூடாது எனக் கூறி 18 பிளஸ் (eighteen plus) ஜோக் செய்வதாக அநாகரிகமாகப் பேசினார் அக்மல்...

சீக்கியர்கள் பற்றிய அக்மலின் இந்த சர்ச்சைப் பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவ, சீக்கியர்கள் சீறத்தொடங்கினர்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கண்ணிலும் வீடியோ பட, அவர் கொந்தளித்துப் போனார்.

சீக்கியர்களின் வரலாற்றை அக்மல் அறிந்துகொள்ள வேண்டும்... பல முறை 12 மணியைக் கடந்து அந்நியர்களிடமிருந்து உங்கள் வீட்டுப் பெண்களை காப்பாற்றி உள்ளோம்... வெட்கப்படும் வகையில் செயல்படாமல் சிறிதாவது நன்றியுடன் இருங்கள் என அக்மலை கண்டித்து காட்டமாக ஹர்பஜன் சிங் பதிவிட்டார்..

எதிர்ப்புகள் வலுத்த சூழலில் தனது கருத்துக்கு பகிரங்கமாக அக்மல் மன்னிப்பு கோரியுள்ளார். உலகெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாவும் பதிவிட்டு பம்மியுள்ளார்....

12 மணியை ஒப்பிட்டுப் பேசிய அக்மல், நள்ளிரவு 12 மணியளவில் மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டதுதான் இதில் ஹைலைட்..... போட்டிக்கு வர்ணனை செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், வாய்க்கு வந்ததைப்பேசி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ள அக்மல், இனியாவது கவனம் கடைப்பிடிக்க வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்