"அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது"- நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வந்துள்ளார். கள ஆய்வு பணிகளுக்கிடையே, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் போல், சட்டமன்றத் தேர்தலிலும் 100 சதவீம்த வெற்றியைப் பெற்று ஆட்சியமைப்போம் என்றார். இதை நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது என வலியுறுத்தினார்.
அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றுள்ளது என்பதை, மக்களுக்கு உணர்த்தும்படி நம் பிரச்சாரம் அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும் என்றும், ,விருதுநகரில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று,7 ஆவது முறையாக ஆட்சி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.